ஆகாயம் பரமன் என்று வேதம் கூறியதால் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் பரமன் என்றே நாம் அறிய வேண்டும். ஆனால் ஆகாயம் ஒரு அறிவு அல்லது உணர்வற்ற ஜடப்பொருளாக நமக்கு தெரிவதால் நாம் உயிருள்ள ஜீவராசிகளை பரமன் என்று அறியாமல் போகலாம். ஆகவே பிராணனே பரமன் என்ற அடுத்த கருத்தை வேதம் நமக்கு தெரிவிக்கிறது.
உயிரற்ற ஜடப்பொருள்களை உயிருள்ள ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது பிராணன் மட்டுமே. பிராணன் ஆகாயம் ஆகிய இரண்டையும் பரமன் என்று வேதம் கூறியதால் எல்லாம் பரமனே என்று நாம் உணர வேண்டும்.
முடிவுரை:
பரமன் அறிவு வடிவானவன்.
பரமன் ஆனந்த மயமானவன்.
பரமன் இருத்தலை இயல்பாக கொண்டு நித்யமாய் இருப்பவன்.
இந்த மூன்று தன்மைகள் உள்ள பரமனே இந்த உலகமாகவும் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களாகவும் காட்சியளிக்கிறான்.
பயிற்சிக்காக:
1. பிராணன் பரமன் என்று வேதம் கூறுவதன் பொருள் என்ன?
சுயசிந்தனைக்காக:
1. உயிருள்ளவற்றிற்கும் உயிரில்லாத ஜடப்பொருள்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.